×

மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள் நெல்லை, தென்காசியில் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜூலை 6: நெல்லை, தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி மாத சம்பளம் ரூ.13 ஆயிரத்து 848, தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ரூ.11 ஆயிரத்து 848 மற்றும் இதர படிகள், தூய்மை காவலர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பளம் ரூ.5ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும், கொரோனா ஊக்கத்தொகை உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஏழுமலை வரவேற்றார். மாவட்ட செயலாளர் சித்தராஜன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் கருப்பையா துவக்கி வைத்தார். அரசு அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சின்னசாமி, மாவட்டச் செயலாளர் கங்காதரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குருசாமி, தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர்கள் தங்கவேல், சாகுல் ஹமீது நிறைவுறையாற்றினர்.

வட்டார பொறுப்பாளர்கள் பராக்கிரம பாண்டியன், நடராஜன், கனகராஜ், மாரி, கண்ணன், பால்துரை, குமரேசன், அப்ரானந்தம், முத்துவேல், ஐயப்பன், தமிழ்ச்செல்வி, சங்கரநாராயணன், ராஜேந்திர குமார், கருப்பசாமி, சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் சங்க நெல்லை மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் பரமசிவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச்செயலாளர் பெரியசாமி, ஏஐடியுசி மாநில தலைவர் காசிவிஸ்வநாதன், நெல்லை மாவட்ட ெபாதுச் செயலாளர் சடையப்பன், மாவட்ட துணைத்தலைவர் ரெங்கன் ஆகியோர் கலந்து ெகாண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் சங்க நெல்லை மாவட்ட துணைத்தலைவர் மாடசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்வேல் முருகன், ஐயப்பன், தூய்மைக்காவலர்கள் சங்க நெல்லை மாவட்ட தலைவர் சாந்தி, துணைத்தலைவர் டெய்சி, செயலாளர்கள் பொன்னுத்தாய், சிவசூரியமலர், மானூர் மாரியம்மாள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சங்க நிர்வாகிகள், கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

The post மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள் நெல்லை, தென்காசியில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nella, Tenkasi ,Tenkasi ,Tamil Nadu ,Panchayat ,Nellai, Tenkasi ,Overhead Tank Operators ,Dinakaran ,
× RELATED நெல்லை, தென்காசியில் வெயிலுக்கு 2 பேர் பலி