×

கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம் நாளை நடக்கிறது

தேனி, ஜூலை 6: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம் நாளை நடக்க உள்ளது. கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் முதல்வார வெள்ளிக்கிழமையன்று திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (ஜூலை 7) காலை திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடக்க உள்ளது.

எனவே, இம்முகாமில் திருநங்கைகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இம்முகாமில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை, மருத்துவகாப்பீடு அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இம்முகாமில் திருநங்கைகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதோடு நலத்திட்ட உதவிகள் பற்றியும் விளக்கப்பட உள்ளது. எனவே, இம்முகாமில் கலந்து கொள்ள வரும் திருநங்கைகள் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையினை கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Theni ,Collector ,Shajivana ,Dinakaran ,
× RELATED சமூகநலத்துறை பணியிடங்களுக்கு...