×

தடகள வீரர் செல்வபிரபு திருமாறனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தமிழ்நாட்டின் செல்வபிரபு திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள்’’ என கூறியுள்ளார்.

The post தடகள வீரர் செல்வபிரபு திருமாறனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Selvaprabu Thirumaran ,Chennai ,Tamil Nadu ,Asia ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...