×

நித்யானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா: இணையதளத்தில் வைரல்

புதுடெல்லி: பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடியதோடு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் நேரலையில் தோன்றி சொற்பொழிவு ஆற்றி வருகிறார். மேலும் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இணையதள செயலியான லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் இருந்தது. அதற்கு கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

The post நித்யானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா: இணையதளத்தில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Ranjita ,Kailasa ,Nityananda ,New Delhi ,Nityanta ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு