×

சிவில் நீதிபதி தேர்வுக்கு ஜூலை 11ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை: சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வுக்கு ஜூலை 11ம் தேதி இலவச பயிற்சி வகுப்புகள் நடப்படும் என சென்னை கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வின் 245 காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 1ம் தேதி வெளியிடப்பட்டு ஜூன் 30ம் தேதிவரை விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்பட்டன. இக்காலிப்பணியிடத்திற்கான முதல் நிலை தேர்வு வரும் ஜூலை 19ம் தேதியும், முதன்மைத் தேர்வுகள் ஜூலை 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல் நிலை தேர்விற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் ஜூலை 11ம் தேதி முதல் சென்னை, கிண்டியில் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் துவங்கப்படவுள்ளது. இத்தேர்விர்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள http://bit.ly/candidatesregis trationform3MZZvn3 என்ற கூகுள் படிவங்கள் இணைப்பு வாயிலாக தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய 9499966021, 044-22501032 ஆகிய எண்களிலும் peeochn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சென்னை கலெக்டர் அருணா கூறியுள்ளார்.

The post சிவில் நீதிபதி தேர்வுக்கு ஜூலை 11ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,TNPSC ,Chennai Vocational Employment and Career Guidance Center ,Dinakaran ,
× RELATED டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு