சென்னை: தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’, கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’, விஜய் நடித்த ‘ஜில்லா’ மற்றும் ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘போராளி’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், நிவேதா தாமஸ். தவிர தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்து வருகிறார். தற்போது அவர், உலகிலுள்ள உயரமான சிகரங்களில் ஒன்றான கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். தான்சானியா நாட்டிலுள்ள இந்த சிகரத்தின் மீது மலையேற்ற பயிற்சி வீரர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள். தற்போது அந்த சிகரத்தில் ஏறி நின்று, இந்திய தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு நிற்கும் போட்டோக்களை நிவேதா தாமஸ் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 5,895 மீட்டர் கொண்ட கிளிமஞ்சாரோ மலையில் ஏறுவதற்காக, சுமார் 6 மாதங்கள் அவர் தீவிர பயிற்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது….
The post கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி தமிழ் நடிகை சாதனை appeared first on Dinakaran.