×

கடைகள், நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம்: அரசிதழ் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் செய்து தர வழிவகுக்கும் திருத்த சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் தொடர்புடைய வரைமுறைகள் தொடர்பான மசோதா ஏப்ரல் 13ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.

“பணியமர்த்துநர் ஒவ்வொருவரும் கடை அல்லது நிறுவனத்தில் உட்புருத்துதல். பணிபுரியும் அனைத்து நபர்களுக்கும், வசதியாக அமைந்துள்ள பொருத்தமான இடங்களில், போதிய அளவு சுகாதாரமான குடிநீரை வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும் பயனுள்ள ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும்.

கழிப்பிடம் மற்றும் சிறுநீர்க்கழிப்பிடம்.- பணியமர்த்துநர் ஒவ்வொருவரும், வருத்துரைக்கப்படலாகிறவாறு, போதிய எண்ணிக்கையில் கழிப்பிடம் மற்றும் சிறுநீர்க்கழிப்பிடங்களை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும். அவை பணிபுரியும் நபர்களுக்கு வேலை நேரத்தின் அனைத்து நேரங்களிலும், அணுகக்கூடியவாறு மிகவும் வசதியானதாக அமைந்திருத்தல் வேண்டும்.

பணியர்த்ததர் ஒவ்வொருவரும், பணிபுரியும் நபர்களுக்காக, குடிநீர் வசதியுடன் கூடிய போதிய மற்றும் பயனுள்ள ஓய்வறை மற்றும் உணவறையினை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும்” என அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.

The post கடைகள், நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம்: அரசிதழ் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்