×

தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சின்னமும் தங்களுக்கே சொந்தம்: தேர்தல் ஆணையத்திற்கு அஜித் பவார் மனு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அஜித் பவார் மற்றும் சரத் பவார் தரப்பு உரிமை கோரியுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் மற்றும் அவரது 8 ஆதரவு எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். இதனை அடுத்து பாஜக கூட்டணி அரசின் துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து இன்று காலையில் அஜித் பவார் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கி தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் சரத் பவார் தரப்பில் மனு தக்கல் செய்யபட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அஜித் பவாரின் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அதன் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோரி அஜித் பவார் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு தக்கல் செய்யபட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில் 40-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமேலவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் அடங்கிய பிரதான பத்திரத்தையும் அவர்கள் தக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி போராட்டம் தேர்தல் ஆணையத்தின் சட்டபோராட்டமாக ந்டைபெறவுள்ளது.

The post தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சின்னமும் தங்களுக்கே சொந்தம்: தேர்தல் ஆணையத்திற்கு அஜித் பவார் மனு appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress party ,Ajit Pawar ,Election Commission ,MUMBAI ,Sarath Pawar ,Dinakaran ,
× RELATED அஜித் பவாருக்கு கட்சி ஒதுக்கிய...