×

சமயபுரம் மாரியம்மன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: அறநிலையத்துறை தகவல்

சென்னை: ழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை:சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் தங்கி பயில மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000/- மும் வழங்கப்படும். இப்பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வயதுக்குள் இருப்பதோடு, இந்து மதத்தை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலமான 2 ஆண்டுகள் தங்கி பயிற்சி பெற வேண்டும்.

சேர்க்கை படிவங்களை இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரிலோ அல்லது www.samayapurammariamman.hrce.tn.gov.in < http://www.samayapurammariamman.hrce.tn.gov.in > என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 90438 76494, 90807 33606, 90471 27115 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.07.2023. ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post சமயபுரம் மாரியம்மன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Samayapuram Mariamman Temple Odhuvar Training School ,Charities Department ,Chennai ,Jnadu Hindu Religious Charities Department ,Samayapuram Arulmiku Mariamman Temple Oduvar Training School ,
× RELATED அறநிலைய நில ஆய்வாளர் தங்கிய விடுதியில் சோதனை