×

அவலாஞ்சியில் பலத்த காற்றுடன் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த 2 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக குன்னூர், கூடலூர், உதகை போன்ற பகுதிகளில் மழையின் அளவு குறைந்திருந்தாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி போன்ற இடங்களிலும், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பந்தலூர் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது.

நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 8 செ.மீ. மழை பதிவான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அப்பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மேல்பவானி பகுதியில் 10 செ.மீ. மழையும், பந்தலூர் பகுதியில் 7 செ.மீ. மழையும், எமரால்டு பகுதியில் 4 செ.மீ. மழையும் பதிவான நிலையில் தற்போது அவலாஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

The post அவலாஞ்சியில் பலத்த காற்றுடன் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Avalanche ,Nilgiris ,Avalanchi ,Nilgiris district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் பெரும் பனிச்சரிவு..!!