×

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோட்டில் ஒன்றான, உடுமலைரோடு வழியாக உடுமலை, பழனி, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருச்சி, சென்னைக்கும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருப்பினும், ஆங்காங்கே உள்ள முக்கிய நகரங்களில் ஏற்படும் வாகன போக்கு வரத்து நெருக்கடியால் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், சுமார் 4 ஆண்டுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம், பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான நான்கு வழிச்சாலை பணி துவங்கப்பட்டது. இப்பணி இதுவரை சுமார் 75 சதவீதத்திற்கு மேலானக நிறைவடைந்துள்ளது.

இருப்பினும், பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலும் வாகனங்கள் விரைந்து குறிப்பிட்ட மணிநேரத்தில் சென்று வர வசதியாக ஏற்படுத்தப்படும் நான்கு வழிச்சாலை பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பொது மக்களின் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, பொள்ளாச்சியிலிருந்து நான்கு வழிச்சாலை துவங்கும் இடமான ஆச்சிப்பட்டியிலிருந்து அனுப்பார்பாளையம் வரையிலும், தனியார் இடம் கையகப்படுத்த காலதாமதமானதால், அப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாலை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரமாக, அப்பகுதியில் இடம் கையகப்படுப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தினர். இதில் நேற்று, ஊஞ்சவேலாம்பட்டியிலிருந்து அனுப்பர்பாளையம் வரையிலும் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கையகப்படுத்தப்பட்ட விவசாய பகுதி நிறைந்த தனியார் நிலத்தில் நின்ற தென்னை உள்ளிட்டவை அகற்றும்பணி நடைபெற்றது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, நான்கு வழி சாலையாக, சுமார் ரூ.3650 கோடியில் மேற்கொள்ளப்படும், நெடுஞ்சாலை பணிகள் நடக்கிறது. இதற்காக, தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதிகளில் தேவையான மின் கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பொள்ளாச்சி அருகே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாய நிலங்கள் கையப்படுத்தும் பணி நடைபெற்றாலும், அண்மையில் அப்பணி சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது, கையகப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது. இப்பணியை விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachhi-Thindugul ,Pollachi ,Udumalai ,Palani ,Mathakulam ,Otansharam ,Thintugul ,Pollachi- ,Dindigul ,
× RELATED கன்னிவாடி சந்தையில் ஆடுகளுக்கு போதிய...