×

பேட்மிண்டன் தரவரிசை: 15 வது இடத்திற்கு சிந்து சரிவு

புதுடெல்லி: இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி.சிந்து உலக தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 27வயதான சிந்து, நேற்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் 3 இடங்கள் பின்தங்கி 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான சிந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 7வது இடத்தில் இருந்தார். ஆனால் தொடர் தோல்விகளால் 15வது இடத்திற்கு சரிந்துள்ளார். மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவால், 30வதுஇடத்தில் உள்ளார்.

The post பேட்மிண்டன் தரவரிசை: 15 வது இடத்திற்கு சிந்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Sindhu ,New Delhi ,India ,PV Sindhu ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...