×

அட்டப்பாடி வனப்பகுதியில் கஞ்சா செடிகள் தீவைத்து அழிப்பு

 

பாலக்காடு, ஜூலை 5: பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனப்பகுதியில் கஞ்சா செடிகளை வனத்துறை காவலர்கள் ரெய்டு நடத்தி தீ வைத்து அழித்தனர். கேரளா மாநிலம், அட்டப்பாடி உட்காட்டு பகுதியான குள்ளாடு காட்டுப்பகுதியில் 3 இடங்களில் சமூக விரோதிகள் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக ரகசிய தகவல் புதூர் வன அதிகாரி முகமது அஷ்ரபிற்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து இப்பகுதியில் புதூர் வன அதிகாரி பினு தலைமையில் ஸ்ரீனிவாசன், பீட் வன அதிகாரி எஸ்.வள்ளி, மணிகண்டன், வன கண்காணிப்பாளர் காளிமுத்து, குமாரன், வள்ளி, விஜயா, லட்சுமி ஆகியோர் சோதனையிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பயிரிட்டு இருந்த 452 கஞ்சா செடிகளை வனத்துறை காவலர்கள் தீவைத்து அழித்தனர். இதையடுத்து இதனை பயிரிட்டுள்ள சமூக விரோதிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post அட்டப்பாடி வனப்பகுதியில் கஞ்சா செடிகள் தீவைத்து அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Attappadi forest ,Palakkad ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...