×

ஒடிசா முதல்வரின் தனி செயலர் மீது முட்டை வீச்சு

புவனேஷ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளர் வி.கே.பாண்டியன். இவர் நேற்று அரசு வாகனத்தில் சுபர்னாபூர் நகரத்துக்கு சென்றார். கோடா சமாலெய்- உளுந்தா சாலையில் ஐஏஎஸ் அதிகாரியின் வாகனம் வந்தபோது ஆம் ஆத்மி தொண்டர்கள் வாகனத்தின் மீது முட்டைகளை வீசினார்கள். ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் அதிகாரியை போன்று நடந்து கொள்ளாமல் அரசியல்வாதியை போன்று நடந்து கொள்வதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிகிறது.இதன் காரணமாக அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகின்றது. இதனிடையே ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர், எங்களது கட்சியை சேர்ந்த சிலர் அதிகாரியின் வாகனத்தின் மீது முட்டையை வீசியுள்ளனர். முட்டை வீசி போராட்டம் நடத்துவது எங்களது சித்தாந்தம் கிடையாது’’ என்றார்.

The post ஒடிசா முதல்வரின் தனி செயலர் மீது முட்டை வீச்சு appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chief Minister ,Bhubaneswar ,Naveen Patnaik ,Private Secretary ,VK Pandian ,Subarnapur ,Koda ,
× RELATED ஒடிசா முதல்வர் பட்நாயக் வேட்பு மனு தாக்கல்