×

நாளை மறுநாள் மின்தடை

 

காரைக்குடி, ஜூலை 5: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் துணை மின் நிலையத்தில் வரும் 7ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை, அமராவதிபுதூர், ஐடிஐ, தேவகோட்டை ரோடு, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலயன்கோட்டை, எஸ்.ஆர்.பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஐஎஸ்எப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.

The post நாளை மறுநாள் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Amaravatiputur ,Dinakaran ,
× RELATED அழகப்பா பல்கலை. கிரிக்கெட்டில் வெற்றி...