×

மீண்டும் அத்துமீறல் மணிப்பூரில் போலீஸ் ஆயுதக்கிடங்கு கொள்ளை: கிளர்ச்சியாளர் சுட்டுக்கொலை

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலம் கடந்த மே 3ம் தேதி முதல் தீப்பற்றி எரிகிறது. மெய்டீஸ் மற்றும் குக்கி இனமக்கள் மோதலில் 130க்கும் மேற்பட்ேடார் பலியாகி விட்டனர். ஏராளமான வீடு, கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. இந்த கலவரத்தின் போது மணிப்பூரில் உள்ள போலீசாரின் 2 ஆயுதக்கிடங்குகள் கொள்ளையடிக்கப்பட்டன. துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கிளர்ச்சியாளர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து சென்ற பிறகு கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கி , தோட்டா, வெடிபொருட்களை மீட்க சமரச அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் போலீஸ் ஆயுதக்கிடங்கை கிளர்ச்சியாளர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். தவுபால் மாவட்டத்தில் உள்ள போலீசாரின் ஆயுத கிடங்கு நேற்று கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இடம் இம்பாலில் இருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது. அந்த ஆயுதக்கிடங்கிற்கு ஏராளமான கிளர்ச்சியாளர்கள் வந்து ஆயுதங்களை கொள்ளையடித்தனர். அவர்களை கலவர தடுப்பு போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் ஆயுதங்களை கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பிச்சென்று விட்டனர். அப்போது நடந்த மோதலில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் குண்டுக்காயம் அடைந்தார்.

The post மீண்டும் அத்துமீறல் மணிப்பூரில் போலீஸ் ஆயுதக்கிடங்கு கொள்ளை: கிளர்ச்சியாளர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Manipur ,New Delhi ,Meites ,Kukis ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி