×

வெளியேறினார் வீனஸ்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 5 முறை வென்றவர் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் (43). இரட்டையர் பிரிவிலும் 7 முறை பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இருந்தும் சமீபகாலமாக போட்டிகளில் அதிகமாக பங்கேற்காததால் வெற்றிகளை வசப்படுத்த முடியாமல் தவிக்கிறார். ஆனாலும் சிறப்பு அனுமதி மூலம் இந்த முறை விம்பிள்டனில் களம் கண்டார். ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வீனஸ் (558வது ரேங்க்) 4-6, 3-6 என நேர் செட்களில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவிடம் (76வது ரேங்க்) தோற்று வெளியேறினார். இருப்பினும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பார் என வீனஸ் தரப்பில் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். அதே சமயம், சொந்த மண்ணில் நடைபெறும் யுஎஸ் ஓபன் தொடருடன் ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post வெளியேறினார் வீனஸ் appeared first on Dinakaran.

Tags : Venus ,Venus Williams ,Wimbledon Grand Slam ,Dinakaran ,
× RELATED துலாம் பெண்களின் வெற்றி ரகசியம்