×

உரிய கல்வி தகுதி இல்லாமல் முனைவர் பட்டம் பெறுவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும்: சென்னை பல்கலை கழகத்துக்கு உத்தரவு

சென்னை: சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஆர்.தண்டபாணி என்பவர் சென்னை பல்கலைகழகத்தில் ‘திருவாசக பக்தி கோட்பாடு’ என்கிற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பிற்காக சேர்ந்தார். பி.ஹெச்.டி. படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெற்ற நிலையில் தண்டபாணிஉரிய தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை, முனைவர் பட்டத்தை திரும்பப்பெறும்படி பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் உதவி பேராசிரியர் முருகேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து முருகேசன் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர், ‘‘164 ஆண்டுகள் பழமையான சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்பிற்கு விண்ணப்பித்தவருடைய தகுதியை சரிபார்க்க தவறியது பல்கலைக் கழகத்தின் அக்கறையின்மையை காட்டுகிறது. தண்டபாணியின் தகுதியை ஆய்வு செய்யாமல் முனைவர் படிப்பிற்கு சேர்த்ததே நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடின உழைப்பால் பட்டம் பெறக்கூடிய முனைவர்களை சந்தேகிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதை சகித்துக் கொள்ளமுடியாது. அதனால், இந்த வழக்கில் மனுதாரர் அளித்த மனுவின் அடிப்படையில் விசாரித்து 4 வாரங்களில் சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post உரிய கல்வி தகுதி இல்லாமல் முனைவர் பட்டம் பெறுவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும்: சென்னை பல்கலை கழகத்துக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : University of Chennai ,Chennai ,R. Dandapani ,Chennai University ,
× RELATED சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன...