×

குற்றாலத்தில் சீசன் அருமை: அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிப்பு.! ஐந்தருவியில் மட்டும் குளிக்க தடை

தென்காசி: குற்றாலத்தில் சாரல் நன்றாக பெய்து வரும் நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இந்த சீசனில் முதன்முறையாக பழைய குற்றாலத்திலும் இன்று காலை முதல் தண்ணீர் விழத் துவங்கியது. இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் சுமாராக இருந்த நிலையில் ஜூலை மாதத்தின் துவக்கம் முதல் சீசன் அருமையாக உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக குற்றாலத்தில் சாரல் நன்றாக பெய்து வருகிறது. பகல் வேலைகளில் வெயில் அவ்வளவாக இல்லை. வானம் பெரும்பாலான நேரம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே ஐந்தருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் விழுந்து வந்த நிலையில் நேற்று புலி அருவியிலும், இன்று காலை பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் விழத் துவங்கியது.

மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய இரண்டு அருவிகளிலும் நேற்று அதிக தண்ணீர் வரத்து காரணமாக மதியம் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலையில் இரண்டு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஐந்தருவியல் காலை எட்டரை மணி அளவில் மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஐந்தருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் தடையின்றி குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கியதை அடுத்து குற்றாலத்தில் சீசன் அருமையாக உள்ளது.

The post குற்றாலத்தில் சீசன் அருமை: அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிப்பு.! ஐந்தருவியில் மட்டும் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : South ,Kulam ,
× RELATED கேரளா, லட்சத்தீவு பகுதிகளில்...