×

கீழ்பவானி சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு: சீரமைப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்

ஈரோடு: கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 68 ஆண்டு காலமாக பயன்பாட்டில் உள்ள கீழ்பவானி கால்வாயின் கரைகளும், கட்டுமானங்களும் பழுதடைந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வீணாக வெளியேறுவதால் கடைமடை பகுதியில் 40 ஏக்கர் நிலங்கள் பாசனமின்றி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே கடைமடை விவசாயிகளின் பாசன உரிமையை பாதுகாக்க கால்வாய் சீரமைப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற கோரி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு பிறகு கீழ்பவானி சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக பேசிவரும் பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோட்டிற்கு வந்தால் கருப்பு கொடி காட்டி விரட்டுவோம் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

The post கீழ்பவானி சீரமைப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு: சீரமைப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Erode ,Kilibawani ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்