×

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மோசமாக இருப்பதாக மாவட்ட நீதிபதி அறிக்கை

மதுரை: ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மோசமாக இருப்பதாக மாவட்ட நீதிபதி அறிக்கைசமர்ப்பித்துள்ளார். மருத்துவமனையில் கட்டடங்கள் மோசமாக இருந்தால் மக்கள் எப்படி மருத்துவமனைக்கு வருவார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐகோர்ட் கிளை உத்தரவின்படி மருத்துவமனை கட்டட வளாகத்தை ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட நீதிபதியின் அறிக்கை, புகைப்படங்களை உடனே சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ஜூலை 6ல் காணொளி காட்சியில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு அளித்துள்ளனர்.

The post ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மோசமாக இருப்பதாக மாவட்ட நீதிபதி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram R. S.S. ,Mangalam ,Madurai ,Mangalam Initial Health Station ,Ramanathapuram R. S.S. District ,Dinakaran ,
× RELATED குளிர்வித்த கோடை மழை