×

மீண்டும் மீண்டும் போலீசில் சிக்கும் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன்!

சென்னை: சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் யூடியூபர் டிடிஎப் வாசன் சென்ற கார் மோதி பைக்கில் சென்றவர் காயம் அடைந்தார். யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன், இவர் யூடியூப் மூலம் இன்றைய கால இளைஞர்களிடம் மிகவும் பிரபலமானவர். இவர் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அதனை யூட்யூபில் பதிவேற்றி வருகிறார்.

டிடிஎப் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார். அவரது பிறந்தநாள் அன்று டிடிஎஃப் வாசனின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதேசமயம் பலமுறை இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர் மீது பலமுறை காவல்துறை வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் சென்ற கார் மோதி பைக்கில் சென்றவர் காயம் அடைந்தார். விபத்து நடைபெற்ற பிறகு அவர் ஆட்டோவில் ஏறிச்சென்றுள்ளார்.

இந்த விபத்து குறித்து டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post மீண்டும் மீண்டும் போலீசில் சிக்கும் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன்! appeared first on Dinakaran.

Tags : TDF Vasan ,Chennai ,Nelson Manickam road ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...