×

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்கக் கோரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதலான ஜெயலலிதாவின் 30 சவரன் நகைகள் தவிர மற்றவை கர்நாடக நீதிமன்றத்தில் இல்லை என இந்த வழக்கிற்காக ஏலம் விடுவதற்காக கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தமிழ்நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் 30 சவரன் நகைகள் தவிர மற்றவை கர்நாடக நீதிமன்றத்தில் இல்லை எனவும் ஏற்கனவே இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 பொருட்களை லஞ்சஒழிப்புத்துறை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக நீதிமன்றத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் லஞ்சஒழிப்புத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஏலம் விடுவதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், இந்த வழக்கு தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை போலீசாரிடம் இருக்கக்கூடிய பொருட்களை உடனடியாக கர்நாடக நீதிமன்றத்தில் ஒப்படைக்கக்கோரி வழக்கறிஞர் லஞ்சஒழிப்புத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Karnataka Government Prosecutor ,Department of Linja ,Jayalalithah ,Bengaluru ,Karnataka Government ,Tamil Nadu Linja Erection Department ,Department of Larified Requests ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதா ஆட்சியில் வாச்சாத்தி கிராம...