×

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது குறித்து முதலமைச்சர் பெருமிதம்

சென்னை: மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது குறித்து முதலமைச்சர் பெருமிதம் அடைந்துள்ளார். திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கான சிறிய எடுத்துக்காட்டுதான் இச்சாதனை என்றும் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டினை உயர்த்தி, தெற்காசியாவின் மையமாக தமிழ்நாட்டை ஆக்கிட உழைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை ஆக்கிட தொடர்ந்து வாய்ப்புகளை ஆராய்ந்து அவற்றில் சிறந்து விளங்கிடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பது குறித்து முதலமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,India ,Chennai ,Djagagam ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...