×

எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை

தர்மபுரி, ஜூலை 4: தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ‘ரேட்டால்’ என்ற எலி மருந்தானது, மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். ‘ரேட்டால்’ மருந்து விற்க கூடிய விற்பனையாளர்களை கண்டறிய, வேளாண்மைத்துறையை உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில் ‘ரேட்டால்’ மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் தடை செய்யப்பட்டுள்ள ‘ரேட்டால்’ தர்மபுரி மாவட்டத்தில் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அதற்கான கைபேசி எண்கள் தர்மபுரி- 9443635600, நல்லம்பள்ளி -7010172866, பாலக்கோடு- 9952401900, காரிமங்கலம் -8526719919, பென்னாகரம் -9443207571, அரூர் -7010983841, மொரப்பூர் -6369976049, பாப்பிரெட்டிப்பட்டி -9444497505 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Joint Director of Agriculture ,Dharmapuri ,Dharmapuri District Agriculture ,Joint Director ,Vijaya ,Agriculture Farmers Welfare Department ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...