×

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்

பள்ளிபாளையம், ஜூலை 4: குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், குறைதீர் முகாம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி முகாமிற்கு தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுற்றுலா வாகனம், ஆட்டோ, பஸ், மினி பஸ் மற்றும் லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர். சொந்த பயன்பாட்டிற்கு வாங்கியுள்ள கார்கள் மற்றும் வாகனங்களை, அதன் உரிமையாளர்கள், வட்டார போக்குரத்து அலுவலர்களை ஏமாற்றி, வாடகைக்கு இயக்கி வருகின்றனர். வாடகைக்கு விடுவதற்கான பர்மிட் கட்டணம் செலுத்தாமல் இயங்கும் இந்த வாகனங்களால், தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது எனவும், பர்மிட் பெறாமல் பள்ளி குழந்தைகளை பல தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள் ஏற்றிச்செல்வதாகவும், இவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர். பள்ளி வாகனங்கள் பல மாவட்டம் கடந்து இயங்குவதாகவும், கரும்பு லாரிகள் ஆபத்து விளைவிக்கும் வகையில் அதிகபாரம் ஏற்றி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரினை பெற்றுக்கொண்ட வட்டார போக்குவரத்து அதிகாரி பூங்குழலி, வாகன ஓட்டுனர்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இனி வரும் காலங்களில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

The post வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Kumarapalayam district ,District Transport Officer ,Poonguzhali ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 90% தேர்ச்சி