×

அரசு கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

ராசிபுரம், ஜூலை 4: திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில், 3 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை, அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாட்டினை, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 250 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும். இந்த இயந்திரமானது 1000 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், நாள் ஒன்றுக்கு 1500 லிட்டர் வரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பானுமதி, ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்அரசன், ஒன்றிய பொருளாளர் முத்துச்செல்வன் மற்றும் அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் appeared first on Dinakaran.

Tags : Government College ,Rasipuram ,Thiruvalluvar Government Arts College ,Minister ,Mathiventhan ,Rajeshkumar ,
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...