×

பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

 

பாடாலூர், ஜூலை4:பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலை கோயிலில் நடந்த பவுர்ணமி கிரிவலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவல விழா நடந்து வருகிறது. இந்த மாதம் நேற்று பவுர்ணமி கிரிவல விழா நடந்தது. முன்னதாக மாலை 5 மணிக்கு மலையின் அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி கையில் தேங்காய், பூ பழங்களுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

பின்னர் வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கிரிவல விழா மற்றும் சிறப்பு அபிஷேகத்தில் பாடாலூர், திருவிளக்குறிச்சி, தெரணி, காரை, விஜயகோபாலபுரம், புதுக்குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, இரூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Pournami Krivalam ,Padalur Poomalai Sanjeevirayar Temple ,Badalur ,Poornami Krivalam ,Badalur Poomalai Sanjeevirayar Hill Temple ,Perambalur District… ,
× RELATED ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை