×

சேரங்கோடு ஊராட்சியில் மலை போல குவியும் குப்பைகளை அகற்ற கோரிக்கை

 

பந்தலூர்,ஜூலை4: நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.15 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரமாகும் குப்பைகளை எருமாடு இன்கோநகர் பகுதியில் கொட்டி வந்தனர் அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதியினர் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் வருவாய்துறை உதவியுடன் சேரம்பாடி சப்பந்தோடு குழிவயல் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடம் தெரிவு செய்து சில நாட்கள் குப்பை கொட்டி வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியிலும் சேரங்கோடு ஊராட்சியின் குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பைகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சப்பந்தோடு குழிவயல் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லால் திணறி வருகின்றனர்.அதனால் சாலையோரம் உள்ளிட்ட பல இடங்களில் ஊராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து சேரங்கோடு ஊராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேரங்கோடு ஊராட்சியில் மலை போல குவியும் குப்பைகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cherangode Panchayat ,Bandalur ,Bandalur district ,Nilgiri district ,
× RELATED பொது மயானத்தில் உணவு கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை