×

ரயில்வே பணிக்கு லஞ்சம் வாங்கியதாக வழக்கு தேஜஸ்வி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: ரயில்வே பணி வழங்க லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் துணை முதல்வர் தேஜஸ்வி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாஜிபூரில் ரயில்வே துறையில் வேலையில் சேருவதற்கு லஞ்சமாக லாலு அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மிக குறைந்த விலையில் நிலத்தை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ கடந்தாண்டு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கின் 2வது குற்றப்பத்திரிகையை சிபிஐ நேற்று தாக்கல் செய்துள்ளது. இதில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள லூலு பிரசாத், ராப்ரி தேவி, லாலுவின் மகள் மிசா பாரதி ஆகியோரின் பெயருடன் புதிதாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஏகே இன்போ சிஸ்டம் மற்றும் பல இடைத்தரகர்கள் உள்பட 14 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

The post ரயில்வே பணிக்கு லஞ்சம் வாங்கியதாக வழக்கு தேஜஸ்வி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : CBI ,Tejaswi ,New Delhi ,Deputy ,CM ,Dinakaran ,
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...