×

நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் ஹராவ் பகுதியில் உள்ள ஷாலிபூர் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக வெடித்து ஒருவர் பலியானார். படுகாயமடைந்த மற்றொருவர் மேல்சிகிச்சைக்காக கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார்.  பலியானவர் பரிதோஷ் மோண்டல் என தெரிய வந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

The post நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kolkata ,West Bengal ,North 24 Pargana district ,
× RELATED கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’...