×

தீட்சிதரை அதிகாரிகள் தாக்கியதாக அவதூறு பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சம்மன்: இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரை அதிகாரிகள், போலீசார் தாக்கியதாக டிவிட்டரில் பதிவிட்ட பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்ட 2 பேரை விசாரணைக்கு இன்று ஆஜராக சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், தீட்சிதரை தாக்கி பூனூலை அறுத்ததாக தி கம்யூன் என்ற டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து பதிவிட்டுள்ளதாக சிதம்பரம் விஏஓ ஷேக் சிராஜூதின் சிதம்பரம் நகர போலீசில் கடந்த ஜூன் 28ம் தேதி புகார் அளித்தார்.

டிவிட்டரில் தி கம்யூன் முகநூலில் அடையாளம் தெரியாத நபர்கள் பதிவிட்டு அவதூறு பரப்பியதாக நகர போலீசார் ஜூன் 29ம் தேதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கவுஷிக் சுப்ரமணியன் ஆகிய இருவருக்கும் ஜூலை 4ம் தேதி (இன்று) சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து வெளியிட்டது தொடர்பாக மதுரை எம்பி வெங்கடேசன் புகார் அளித்ததன் அடிப்படையில் பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். தற்போது நிபந்தனை ஜாமீனில் இருக்கும் அவருக்கு மீண்டும் தீட்சிதர் பிரச்னை தொடர்பாக அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் விசாரணைக்காக ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தீட்சிதரை அதிகாரிகள் தாக்கியதாக அவதூறு பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சம்மன்: இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,State Secretary ,S.G. Surya ,Dikshitar ,Chidambaram ,S.G. ,Chidambaram Nataraja ,Surya ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...