×

இஞ்சி 260, பூண்டு 200, குட மிளகாய் 220க்கு விற்பனை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு.! தக்காளி விலை 10 குறைந்தது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் குறைந்து 100க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், மற்ற காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகள் விலை கடந்த ஒருவாரமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை மார்க்கெட்டுக்கு 450 வாகனங்களில் 5,000 டன் காய்கறிகள் வந்துள்ளது. இதன்காரணமாக அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ இஞ்சி 260க்கும் பூண்டு 200க்கும் பீன்ஸ் 110 க்கும் பச்சைமிளகாய் 90க்கும் வண்ண குடமிளகாய் 220க்கும் பட்டாணி 180க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர, ஒரு கிலோ தக்காளி 100க்கும் வெங்காயம் 20க்கும் சின்ன வெங்காயம் 80க்கும் உருளைகிழங்கு 35க்கும் முள்ளங்கி 40க்கும் முட்டைகோஸ் 20க்கும் கத்திரிக்காய் 40க்கும் காராமணி 60க்கும் சவ்சவ் 25க்கும் புடலங்காய் 30க்கும் சுரக்காய் 35க்கும் வெண்டைக்காய் 50க்கும் முருங்கைக்காய் 30க்கும் சேனை கிழங்கு 40க்கும் காலிபிளவர் 30க்கும் அவரைக்காய் 80க்கும் பீரக்கங்காய் 50க்கும் நூக்கல் 35க்கும் கோவக்காய் 30க்கும் கொத்தவரங்காய் 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாயில் இருந்து 150க்கும் இஞ்சி 300க்கும் பீன்ஸ் 130க்கும் பட்டாணி 210 க்கும் பச்சை மிளகாய் 110 க்கும் வண்ண குட மிளகாய் 240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுசம்பந்தமாக கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது,’’ கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்வரத்து குறைவால் அனைத்து காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பீன்ஸ் இஞ்சி, வண்ண குடமிளகாய், பட்டாணி விலை அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் தினமும் 650 வாகனங்களில் 7000 டன் காய்கறிகள் வரும் நிலையில் இன்று காலை 450 வாகனங்களில் 5,000டன் குறைவான காய்கறிகள் வந்ததுள்ளன. இதன் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அனைத்து காய்கறிகள் விலை இந்த மாதம் முழுவதும் நீடிக்கும். அடுத்த மாதம் அனைத்து காய்கறிகள் விலை படிப்படியாக குறையும்’ என்றார். பெண்கள் கூறும்போது, ‘’கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்த நிலையில்தான் உள்ளது. தக்காளியின் விலை உயர்ந்து வந்த நிலையில் மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, இஞ்சி, பீன்ஸ், பட்டாணி, வண்ண குடமிளகாய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

The post இஞ்சி 260, பூண்டு 200, குட மிளகாய் 220க்கு விற்பனை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு.! தக்காளி விலை 10 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Coimbade Market ,Annagar ,Chennai's Coimbed Market ,Dinakaran ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...