×

பெங்களூருவில் நடக்க இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு: வேறு இடத்திற்கு மாற்றமா?

டெல்லி: பெங்களூருவில் ஜூலை 13, 14-ல் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று எதிர்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதனை தொடர்ந்து முதல் கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் முக்கிய எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பை ஏற்று 17 கட்சிகளை சேர்ந்த 32 தலைவர்கள் கடந்த 23ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் இதில் ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் ஜூலை 13, 14-ல் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஐக்கிய ஜனதா தளம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜூலை 10 முதல் 24 வரை பீகார் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதால் எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த மாத இறுதியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறலாம் என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார். மகாராஷ்டிரா அரசியலில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளதால் கூட்டம் ஒத்திவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா அல்லது ஜெய்ப்பூரில் கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post பெங்களூருவில் நடக்க இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு: வேறு இடத்திற்கு மாற்றமா? appeared first on Dinakaran.

Tags : bangalore ,Delhi ,Bajava ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!