×

திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு கேரள தலைநகரை மாற்றக்கோரி நாடாளுமன்றத்தில் மசோதா: காங்கிரஸ் எம்பிக்கு கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள தலைநகரை திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ள எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்பி ஹைபி ஈடனுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் ஹைபி ஈடன். இவர் கேரள தலைநகரை திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு மாற்ற வேண்டும் என்று கூறி ஒரு தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எம்பிக்களான சசிதரூர், முரளீதரன் உள்பட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஹைபி ஈடனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஹைபி ஈடனின் மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு கேரள தலைநகரை மாற்றக்கோரி நாடாளுமன்றத்தில் மசோதா: காங்கிரஸ் எம்பிக்கு கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kochi ,Kerala ,Modikori ,Parliament ,Congressmen ,Ernakulam constituency ,Churakkori ,Congress ,Dinakaran ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...