×

ஏன்டா பீட் காசு கொடுக்கலையா? இன்ஸ்பெக்டர் பிடிக்க சொல்லிடுவாரு…மணல் கடத்தல்காரரிடம் அதிகார பேரம் பேசிய ஏட்டு சஸ்பெண்ட்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸ் ஏட்டு சீனிவாசன் மணல் கடத்தல்காரரிடம் பேரம் பேசிய 2 ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ விவரம்:

ஏட்டு சீனிவாசன்: ஏன்டா பீட் காசும் கொடுக்கலையாம். டியூ காசும் கொடுக்கலையாம்.

கடத்தல்காரர்: இன்னிக்கு பீட் காசு தரணும்னா, டியூ காசு ஒரு ஐந்தாயிரம் நின்னு இருக்கு.

ஏட்டு: இல்லடா அவன் இன்ஸ்பெக்டர் கிட்ட குறைத்து கொடுத்துவிட்டு, லிஸ்ட் கொடுத்துடுறேன்னு சொல்லி இருக்கான். கொடுத்தான்னா இன்ஸ்பெக்டர் பிடிச்சுடுவாரு. சொல்லிட்டேன் நானு, போலீசுக்கு வழிகாட்டி விட்டா ஒவ்வொரு வண்டியா பிடிச்சு போட்டுடுவாங்க.

கடத்தல்காரர்: நான் இத்தனை நாள் கொடுத்தேன்ல.

ஏட்டு: அதெல்லாம் வேணாம்டா, ஒரு நாள் கொடுக்கலின்னா பரவாயில்லைடா, இத்தனை நாள் கொடுக்கலின்னா எப்படி?

கடத்தல்காரர்: நான் 5 நாள், 6 நாள் சும்மாதான் இருக்கேன்.

ஏட்டு: அப்புறம் எப்படிடா அவன் கொடுப்பான் இன்ஸ்பெக்டர் கிட்ட. நீ வேணும்னா டியூ நடத்தி பாக்குறது.

கடத்தல்காரர்: நான் எதுக்குனா நடத்தனும், இல்ல நான் தனியா கூட பாக்குறேன்னா, இல்லனா நான் கட்டுனது போனா கூட பரவாயில்லைனா, நான் டியூக்கு வரலைங்கனா.

ஏட்டு: ‘நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அப்புறம் அவன் லிஸ்ட் குறைச்சு கொடுத்தான்னா, இன்ஸ்பெக்டர் பிடிக்க சொல்லிடுவாரு. நான் வண்டிய பிடிச்சுடுவேன். அப்புறம் கெஞ்சுனா கூட ஆகாது’ என்கிறார். மற்றொரு ஆடியோவில் ‘பீட் பணம் ஏன் தரவில்லை. பீட் பணம் தராவிட்டால் சங்கர் குறைத்து லிஸ்ட் காட்டிவிடுவார். போலீஸ்காரருக்கு நடுவில் என்ன தருகிறீர்கள். 500 ரூபா கொடுத்து பெட்ரோல் கூட போடுவதில்லை’ என ஏட்டு பேசுகிறார்.

அதற்கு மணல் கடத்தல்காரர், ‘கேஸ் போட்டு உள்ளே போயிருந்தாலே நிம்மதியா இருந்திருக்கும். 16 ஆயிரம் ரூபாய் கொடுத்ததில் இருந்து நான் கடனாளியாக உள்ளேன்’ என புலம்புகிறார். இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று ஏட்டு சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடி உத்தரவிட்டார். அதோடு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஏன்டா பீட் காசு கொடுக்கலையா? இன்ஸ்பெக்டர் பிடிக்க சொல்லிடுவாரு…மணல் கடத்தல்காரரிடம் அதிகார பேரம் பேசிய ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Pete ,Etu ,Tirupathur district ,Ambur ,Ettu Srinivasan ,Attu ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...