×

காதல் மனைவியை கொன்ற கணவர் போலீசில் சரண்

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பன்பண்ணையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் பூல்பாண்டியன்(28). கூலித்தொழிலாளி. இவர் தனது அத்தை மகளான முத்துராணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கருப்பசாமி என்ற கதிர்(5), உதயபாலா(2) என்ற 2 மகன்கள் உள்ளனர். பூல்பாண்டி குடும்ப செலவுகளுக்காக மனைவி முத்துராணியின் நகைகளை கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியில் இலவச பட்டா கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் குடிசை போடுவதற்காக இருவரும் சென்றுள்ளனர். அங்கு வைத்தும் பூல்பாண்டி தனது மனைவியிடம் நகைகளை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பூல்பாண்டி தான் வைத்திருந்த துண்டால் மனைவி முத்துராணி கழுத்தில் போட்டு நெரித்துள்ளார். இதில் முத்துராணி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து பூல்பாண்டி அங்கிருந்து தப்பியோடி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

The post காதல் மனைவியை கொன்ற கணவர் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Saran ,Srivaikundam ,Thoothukudi district ,Charan ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...