×

கல்லால் சரமாரியாக தாக்கி டிராவல்ஸ் ஊழியரை கொலை செய்த 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது: மது கொடுக்காததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்

அண்ணாநகர்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள திப்புசுல்தான் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணியாற்றினார். இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காவல்நிலையம் அருகே காலி மைதானத்தில் கடந்த 30ம் தேதி ரவிச்சந்திரன் இறந்துகிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு போலீசார் சென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் கல்லால் தாக்கி கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இரண்டு திருநங்கைகள் நின்றிருப்பதை அடையாளம் காட்டியது. இதன்படி, தனிப்படை போலீசார் கோயம்பேடு பகுதியில் நின்றிருந்த இரண்டு திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தியதில், ‘’கோயம்பேடு பகுதியை சேர்ந்த ப்ரீத்தி(34), ஆர்த்தி (எ) சத்யா(38) என்பதும் இவர்களுடன் சேர்ந்து சம்பத்குமார்(எ) சாகித்(25) என்பவர் ஆகியோர் ரவிச்சந்திரனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர் என்று தெரிந்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்துவந்த சாகித்தை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் சாகித் கூறியதாவது; கடந்த 29ம் தேதி இரவு கோயம்பேடு காவல் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் குடிபோதையில் நின்றபோது அங்கு சென்ற ரவிச்சந்திரன், இரண்டு திருநங்கைகளிடம் பேசியபோது 200 ரூபாய் கேட்டுள்ளனர். அப்போது என்னிடம் பணம் இல்லை மதுபாட்டில் உள்ளது என்று கூறிவிட்டு பணம் கொண்டுவருவதாக சென்றவர் சிறிது நேரம் கழித்து வந்து மதுபாட்டில்தான் உள்ளது என்று சொன்னதுடன் மதுபாட்டில்கள் தர மறுத்தார். இதனால் ரவிச்சந்திரனை சரமாரியாக தாக்கியதுடன் தரையில் இழுத்துச்சென்று அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து முகம், நெத்தி பகுதிகளில் தாக்கி கொலை செய்துவிட்டு அவரது செல்போனை பறித்து சென்றுவிட்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள திருநங்கைகள்ஆர்த்தி, ப்ரீத்தி மற்றும் சாகித் ஆகிய 3 பேரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சமூகநல ஆர்வலர்கள் கூறும்போது, ‘’கோயம்பேடு காவல்நிலையம் அருகே உள்ள மைதானத்தில் பல வருடங்களாக சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இதுசம்பந்தமாக போலீசாரிடம் பலமுறை தகவல் தெரிவித்துள்ளோம். எனவே, போலீசார் தீவிரமாக ரோந்துவந்து கண்காணிக்கவேண்டும்’ என்றனர்.

The post கல்லால் சரமாரியாக தாக்கி டிராவல்ஸ் ஊழியரை கொலை செய்த 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது: மது கொடுக்காததால் தீர்த்துக்கட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Travels ,Annagar ,Ravichandran ,Thanjavur district ,Dippusultan Travels Office ,Coimpet, Chennai ,
× RELATED ரதிமீனா டிராவல்ஸ் அலுவலகத்தில் ரெய்டு