×

லெபனானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்ததில் மகிழ்ச்சி: சுனில் சேத்ரி பேட்டி

பெங்களூரு: 14வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா- லெபனான் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா தனது முதல் 4 வாய்ப்புகளை கோலாக்கியது. ஆனால் லெபனான் 4 வாய்ப்புகளில் 2ஐ வீணடித்தது. இதனால் இந்தியா 4 – 2 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 4ம் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா – குவைத் அணிகள் மோதுகின்றன. வெற்றிக்கு பின் கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில், போட்டி எளிதாக இருக்கவில்லை. லெபனானுககு எதிராக ஆடுவது எளிதல்ல. பெனால்டி கிக்கில் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்தி போட்டியை வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இறுதிப்போட்டி பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. சிறிது நேரம் ஓய்வெடுத்து இறுதிப் போட்டியைப் பற்றி சிந்திக்கப் போகிறோம், என்றார். இதனிடையே பைனலுக்கு நுழைந்த இந்திய அணிக்கு விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக்தாகூர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post லெபனானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்ததில் மகிழ்ச்சி: சுனில் சேத்ரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Lebanon ,Sunil Chetri ,Bangalore ,14th South Asian Football Championship ,India ,Sunil Sethri ,Dinakaran ,
× RELATED ககன்யான்: கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி..!!