×

சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாயில் உடனடியாக சீரமைப்பு பணி: பெரியகுளம் மக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம், ஜூலை 2: தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. இவ்வாறே கூடலூர் லோயர் கேம்ப் முல்லையாற்றில் இருந்து உறை கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீரில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக இருந்த கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், பேரூராட்சிகளுக்கு பல கோடி ரூபாய் செலவில் புதிய ( கேபிடி திட்டம்) கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தினால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடு சிரமமின்றி வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக காலத்தில் இந்த திட்டத்தில் எந்தவித சீரமைப்பு பணிகளும் நடக்கவில்லை. ஆனால், தற்போதைய ஆட்சியில் குடிநீர் குழாய் சிறு பழுது ஏற்பட்டாலும் உடனடியாக சரி செய்யப்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

பெரியகுளம் வட்டம் தென்கரைப் பேரூராட்சி மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு மக்களுக்கு வழங்குவதற்காக சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் குழாயில் சிறு பழுது ஏற்பட்டதை தொடர்ந்து தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தங்கு தடை இன்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க பணியாளர்கள் மூலம் பராமரிப்பு பணி மேற்கொண்டனர். உடனடியாக குடிநீர் பிரச்னை ஏற்படாமல் நடவடிக்கை எடுத்த பேரூராட்சி தலைவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாயில் உடனடியாக சீரமைப்பு பணி: பெரியகுளம் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sothupparai ,Periyakulam ,Theni district ,DMK ,
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 13 செ.மீ. மழை பதிவு..!!