×

அரசு பள்ளி மாணவிகளுக்கு எம்.பி பரிசு வழங்கினார்

பேரையூர், ஜூலை 2: பேரையூர் அரசு பள்ளியில், கடந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி பரிசுகள் வழங்கினார். விருதுநகர் எம்பி.மாணிக்கம்தாகூர் நேற்று முன்தினம் டி.கல்லுப்பட்டி, பேரையூர், பி.அம்மாபட்டி, சாலிச்சந்தை, கிளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது பல்வேறு இடங்களிலும் நடைபெறும் 100 நாள் வேலைத் திட்டப்பணிகளை பார்வையிட்டார். மேலும் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் முரளி, யூனியன் ஆணையாளர் சிவசங்கரபாண்டியன், தலைமை ஆசிரியர் விமலாதேவி, சேர்மன் குருசாமி, திமுக ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வருசை முகம்மது, திமுக மகளிரணி நிர்வாகி விண்ணரசி, காங்கிரஸ் நிர்வாகி காமாட்சி, திமுக இளைஞரணி திராவிட சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி மாணவிகளுக்கு எம்.பி பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Beraiyur Government School ,Manikam Tagore ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை