×

கொட்ட மேடு அங்கன்வாடியை சீரமைக்க கோரிக்கை

கூடலூர், ஜூலை 2: கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டமேடு பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்குள்ள குன்னம்வயல், பாலம்வயல், தரிப்பக்கொல்லி, மணல் கொல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவிலான ஆதிவாசி குடும்பங்களின் குழந்தைகளும், பிற இன மக்களின் குழந்தைகளும் இந்த அங்கன்வாடிக்கு வருகின்றனர்.

தற்போது, கட்டிடம் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் தற்காலிகமாக அங்கன்வாடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக இப்பகுதி வார்டு உறுப்பினர் ரம்சீனா ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய குழு தலைவர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனுக்கள் அளித்துள்ளார்.

The post கொட்ட மேடு அங்கன்வாடியை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kotta Medu Anganwadi ,Kudalur ,Anganwadi ,Kottamedu ,Devar Solai ,Kudalur.… ,Kottamedu Anganwadi ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!!