×

வனவரை தாக்கி நகை பறிப்பு

தேன்கனிக்கோட்டை, ஜூலை 2:ஜவளகிரி வனச்சரக அலுவலகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் சாம்ராஜ்(24). இவர், நேற்று முன்தினம் இரவு ஜவளகிரியில் இருந்து தனது கிராமத்திற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வாகனம் மோதியதில், சாம்ராஜ் காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த சூளகுண்டா வனவர் ரமேஷ்(50) சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சாம்ராஜ் மீது எந்த தவறும் இல்லை. போலீசார் மூலமாக பேசி கொள்கிறோம் என கூறியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தளி ஒன்றிய பகுதி செயலாளர் பாப்பையா(42) என்பவர், திடீரென ரமேஷ் கன்னத்தில் அடித்தார். தொடர்ந்து அங்கிருந்த சிலர் ரமேஷ் மற்றும் சாம்ராஜ் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த ரமேஷ் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாம்ராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ரமேஷ் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை திருட்டு போனது. இதுகுறித்து தளி போலீசில் புகார் தெரிவிததார். இதுகுறித்து பாப்பையா உட்பட மேலும் சிலர் மீது வழக்குப்பவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வனவரை தாக்கி நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Vanavara ,Dhenkanikottai ,Samraj ,Javalagiri Forest Office ,
× RELATED பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்