×

ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு

டெல்லி: ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

The post ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Monsoon session of Parliament ,Union Minister ,Prakalat Joshi ,Delhi ,Pragalad Joshi ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...