×

இந்தியா தலைமையில் ஷாங்காய் மாநாடு சீன அதிபர், பாக். பிரதமர் பங்கேற்பு

பீஜிங்: வரும் 4ம் தேதி இந்தியா தலைமையில் நடக்கும் ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்,பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 23வது உச்சிமாநாடு வரும் 4 ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.இணைய வழியில் நடக்கும் மாநாட்டில் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் காணொளி மூலம் பங்கேற்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இதில் பங்கேற்கிறார்.

The post இந்தியா தலைமையில் ஷாங்காய் மாநாடு சீன அதிபர், பாக். பிரதமர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Shanghai Conference ,India ,President ,Pak. ,Beijing ,Xi Jinping ,Shebaz Sharif ,Dinakaran ,
× RELATED பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்.. இந்தியா...