×

மாமல்லபுரத்தில் பல்வேறு வசதிகளுடன் ரூ.50 கோடியில் நவீன பேருந்து நிலையம்: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் நேரில் ஆய்வு

சென்னை: மாமல்லபுரத்தில் ரூ.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் பார்வையிட்டனர். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சிஎம்டிஏ மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, ரூ.50 கோடியில் மாமல்லபுரத்தில் பல்வேறு வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் கட்டப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆகியோர் நேரில் வந்து பேருந்து நிலையத்தின் வரைபடத்தை வைத்து பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு பேட்டியளிக்கையில், ‘‘புதிய பேருந்து நிலையம் 6.79 ஏக்கரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சதுர அடியில் அமைய இருக்கிறது. 50 பேருந்துகள் நிற்கும் வகையில் கட்டப்பட உள்ளது. பேருந்து நிலையம் கட்டப்பட்டால் மாமல்லபுரம் நகரில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும்’’ என்றார்.

The post மாமல்லபுரத்தில் பல்வேறு வசதிகளுடன் ரூ.50 கோடியில் நவீன பேருந்து நிலையம்: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Ministers ,Shekharbabu ,Anbarasan ,CHENNAI ,P.K. Sekarbabu ,Tha.Mo. ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் நுழைவுவாயில்...