×

செந்தில் பாலாஜி மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியானது.!

சென்னை: செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அவர் மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அமைச்சரை நேரடியாக நிய்மிப்பதற்கோ, நீக்குவதற்கோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்ட ஆலோசனை பெறாமல் ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளது தெரிகிறது. எனது அமைச்சரவையில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அவசரம் காட்டி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

அரசியல் சாசனத்தின் செயல்பாடு முறிந்துவிட்டதாக ஆளுநர் கூறியதை ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் அனுமதி இல்லாமல், அமைச்சரை நீக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனது பரிந்துரை இல்லாமல் அமைச்சரை நீக்கி தாங்கள் தெரிவித்த சட்டவிரோத தகவல் செல்லுபடியாகாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரை நீக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆளுநர் வழங்கும் அரசியல் சாசனத்துக்கு விரோதமான அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்றமாட்டோம்.

மக்களின் நம்பிக்கைதான் தமக்கும், அமைச்சரவைக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வலுவான சொத்து. இத்தகைய முக்கிய முடிவை எடுக்கும் முன்பு ஆளுநர் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெறவில்லை. அமைச்சர்களாக யார் இருக்க வேண்டும், யார் இருக்ககூடாது என்பதை நான் தான் முடிவு செய்ய முடியும். வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய பிறகுதான் அமைச்சர் பதவியில் தொடரும் தகுதியை இழப்பார். விசாரணை தொடங்கிவிட்டாலே ஒருவர் சட்டப்படி அமைச்சராக தொடக்க கூடாது என்று கூற முடியாது. அமைச்சர் பதவி நீக்க உத்தரவு தொடர்பாக அட்டார்னி ஜெனரலிடம் ஆலோசிக்க போவதாக ஆளுநர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டுக்கு பிறகு ஆளுநர் தனது முடிவை நிறுத்திவைத்துள்ளார்.

அரசியல் சாசன நடைமுறை முறிந்துவிட்டதாக ஆளுநர் குறிப்பிட்டது மறைமுகமான மிரட்டல். அரசியல் சாசனம் குறித்து ஆளுநருக்கு போதிய தெளிவு இல்லை என்பது தெளிவாகிறது. தமிழ்நாடு கலாச்சாரத்தின்படி ஆளுநருக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு கொடுத்துவருகிறது. உங்கள் சட்டவிரோத உத்தரவுக்கு பணிந்து போக்வேண்டும் என்று அர்த்தம் இல்லை. விசாரணைக்காகவே செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. விசாரணையில் செந்தில்பாலாஜி தலையிடுவார் என்பது அடிப்படை இல்லாதது. ஒருசார்பு தன்மையுடன் செயல்படுவதுதான் உங்கள் நோக்கம் என்பது தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post செந்தில் பாலாஜி மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியானது.! appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Governor ,R. N.N. Raviku ,Principal ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,G.K. ,Stalin ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...