×

கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சக்தியை முழுமுதற்கடவுளாகக் கருதி வழிபடும் சமயப் பிரிவு `சாக்தம்’ எனப் படும். சக்தி வழிபாடு செய்பவர்களை சாக்தர்கள் என்கிறோம். இவர்கள் பல பிரிவினரை இணைக்கின்றனர். சிவனின் மனைவியாக, திருமாலின் சகோதரியாக, கணபதி, குமரன் ஆகியோரின் தாயாக சக்தி இருப்பதனால், சாக்தம் மற்ற பிரிவினையும் அரவணைத்துச் செல்கின்றது. ஏனைய புறச்சமயப் பிரிவுகளிலும் அன்னை வழிபாடு வெவ்வேறு பெயர்களில் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். காலங்காலமாக உலகின் பல பாகங்களிலும் சக்தி வழிபாட்டை மக்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பதற்கு நம் நாட்டின் பல பாகங்களில் காணப்படும் பண்டைய காலத்து சக்தி இலைகளே சான்றாகும்.

அந்த சக்தியே ஊருக்கு ஊர், பல்வேறு வடிவங்களிலும், பல பெயர்களையும் கொண்டு நம் அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள். அந்த அன்னைதான் கொல்லூரில் துன்பம் நீக்கும் துர்க்கையாக, மூகனை வென்ற மூகாம்பிகையாகக் கொலுவீற்றிருக்கிறாள்.கர்நாடக மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள குந்தாபூர் மாவட்டத்தில் மிகச் சிறிய ஊர் தமான் ‘‘கொல்லூர்’’. தென் கன்னடப் பகுதியில் வடகிழக்கு எல்லையில் இந்த ஊர் உள்ளது.

மங்களூரிலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. குடசாத்திரி மலையிலிருந்து உற்பத்தியாகும் சௌபர்னிகா ஆறு இந்த திருத்தலத்தை வலம் வந்து செல்லுகின்றது. அதன் அருகே 6 அடி உயர புற்று ஒன்று உள்ளது. இந்தக் கோயிலின் மேற்கு கோபுர வாயில் வழியாக ஆதிசங்கரர் கோயிலின் உள்ளே நுழைந்ததாகவும், அதன் நினைவாக அந்த வாயில் மூடியபடியே இன்றளவும் உள்ளது.

கிழக்கு வாயில் வழியாகத்தான் பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மண்டபத்தை அடுத்து காவல் தெய்வமான வீரபத்திரரை தரிசனம் செய்த பின்னர், தெற்குப் பிராகாரத்தில் ‘‘பத்து கரங்கள் கொண்ட விநாயகர்’’ மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்து காட்சி தருவதைக் காணலாம். தென் கிழக்குப் பகுதியில் சுப்ரமணியர் நாக உருவில் காட்சி தருகின்றார். வேலனுக்கு வட திசையில் கலைமகள் மண்டபம் உள்ளது.

இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு அபயகரத்தோடு, வலது கரம் தன் தானை சுட்டும்படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தபடி அன்னை மூகாம்பிகை கருவறையில் காட்சி தருகின்றாள். அன்னை காட்சி தரும் கருவறை விமானம் முழுவதும் பொன்னால் செய்யப்பட்டுள்ளது. கருவறையில் அன்னையின் முன்னர் பொற்கோடால் இரு பிளவு பிட்டாற்போல் தோன்று கிறது. இந்த சிவலிங்கம், துவாபரயுகத்தில் கோலமுனி தவம் புரியும் போது தோன்றியது என்பது அனைவரின் நம்பிக்கையாகும்.

உச்சிப் பொழுதில் கண்ணாடியின் மூலமாக இந்த லிங்கத்தின் மீது ஒளியைப் பிரதி பலிக்கச் செய்தால், இந்தப் பொற்கோட்டைப் பார்க்கலாம். அன்னை பொன்வண்ணமுடையாள். செவ்வரனிப் பூக்கள் விரும்பி அணிவிக்கப்படுகின்றன. அப்பொழுது அன்னை நவமணிகளால் அலங்கரிக்கப்படுகின்றாள். அன்னையின் திருமேனி பஞ்ச லோகத்தால் ஆனது. கன்னியாகுமரியில், அன்னையின் நாசியில் மாணிக்க மூக்குத்தி அலங்கரிப்பது போல, கொல்லூரில் அன்னை ஸ்ரீமூகாம்பிகையின் மாப்பிலும், இடையிலும், மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது.

முதன் முதலில் இத்திருக்கோயிலுக்கு வருபவர்கள் அர்ச்சகரின் உதவியுடன் சௌபர்னிகா ஆற்றுக்குச் சென்று அர்ச்சகர் கூறும் மந்திரங்களை உச்சரித்து, ஆற்று நீரில் நீராட வேண்டும். இதனை ‘‘சங்கல்ப ஸ்நானம்’’ என்று கூறுவர். பின்னர் ஓர் தட்டில் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி முதலிய அர்ச்சனைப் பொருட்களுடன் அர்ச்சகர் கூறும் மந்திரங்களைக் கூறி கோயில் வாயிற்படியில் தேங்காய்ப் படித்தட்டை வைத்துவிட்டு கோயிலை வலம் வந்து வணங்க வேண்டும். அதன் பின்னர் தாங்கள் விரும்பும் வகையில் அன்னையை வழிபடலாம்.

செய்யும் தொழிலில் வெற்றி பெற குங்கும அர்ச்சனையும், நோய் நொடிகளிலிருந்து விடுபட நிவேதனமும், கல்வியில் சிறந்து விளங்க மகா திருமதுர நிவேதனமும் செய்கிறார்கள். மன நிறைவைத் தரும் சக்தியின் திருத்தலங் களில் கொல்லூர் சக்தியின் மதப்பண்பாட்டின் அவகுகள் நிறைந்த மிகச் சிறந்த தலமாகும்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

The post கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை appeared first on Dinakaran.

Tags : Kollur Srimukambikai ,Shaktham ,Kunkum Anmigam ,Shakti ,
× RELATED சிற்பமும் சிறப்பும்