×

ஆளுநர் கடித விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் கடிதம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையானது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி 5 மணி நேரத்தில் நிறுத்தி வைத்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தல்படி உத்தரவை நிறுத்தி வைத்ததாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்தை அறியுமாறு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியதால் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டப்படி சந்திப்போம் என்று முதலமைச்சர் எச்சரித்திருந்த நிலையில் முடிவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.

சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கியது, பிறகு நிறுத்திவைத்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவு குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

The post ஆளுநர் கடித விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Legal Professionals ,G.K. Stalin ,Chennai ,Minister ,Senthilbalaji ,Senthil Balaji ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...