×

அமெரிக்காவிடம் டிரோன் கொள்முதல் இந்தியாவிற்கு 27 சதவீதம் விலை குறைவு?

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து வாங்கவுள்ள எம்கியூ 9பி டிரோன் கொள்முதல் விலையானது மற்ற நாடுகளை காட்டிலும் 27 சதவீதம் குறைவாக இருக்கும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிடம் இருந்து எம்கியூ-9பி ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த பேரத்தில் மற்ற நாடுகளை விட 4 மடங்கு அதிக விலை கொடுத்து இந்தியா டிரோன்களை வாங்க உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதனிடையே அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் எம்கியூ-9பி டிரோன்களின் விலையானது மற்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட விலையைக்காட்டிலும் 27 சதவீதம் குறைவாக இருக்கும் என்று பாதுகாப்பு துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 15ம் தேதி நடந்த பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் 31 எம்கியூ-9பி டிரோன்களை வாங்குவதற்கு ஒப்புதல் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.  விலை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

The post அமெரிக்காவிடம் டிரோன் கொள்முதல் இந்தியாவிற்கு 27 சதவீதம் விலை குறைவு? appeared first on Dinakaran.

Tags : India ,America ,New Delhi ,USA ,Dinakaran ,
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...